Pages

Thursday, February 20, 2014

பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி ?





திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு சம்பத் என்பவரருக்கு நன்றி..!

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணையை வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
2
நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்து வைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

Sundara Kandam -சுந்தர காண்டம்.



சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்? படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ? எப்படி படிக்க வேண்டும்?  சம்ஸ்கிருத மூலமும் அதன் விளக்கங்களுடன்  முழுமையான சுந்தர காண்டம்  28 பாகங்களாக கீழே உள்ளது.
 நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.
சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள்.
24,000
சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.

68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.

பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.

ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.
ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும்.
ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.

   
சுந்தர காண்டம் . MP3 Audio Book


01-Sundara Kandam-01.mp3      27.3 MB   29:49 Min

02-Sundara Kandam-02.mp3      27.05 MB 30:08 Min

03-Sundara Kandam-03.mp3      27.5 MB  30:08 Min

04-Sundara Kandam-04.mp3      30.9 MB  33:49 Min

05-Sundara Kandam-05.mp3      27.6 MB  30:09 Min

06-Sundara Kandam-06.mp3      27.5 MB  30:09 Min

07-Sundara Kandam-07.mp3      27.4 MB  29:55 Min

08-Sundara Kandam-08.mp3     10.04 MB  11:24 Min

09-Sundara Kandam-09.mp3     27.6 MB 30:10 Min
   
10-Sundara Kandam-10.mp3    27.6 MB  30:09 Min

11-Sundara Kandam-11.mp3     27.6 MB 30:13 Min

12-Sundara Kandam-12.mp3    25.5 MB 27:54 Min

13-Sundara Kandam-13.mp3    27.5 MB 30:04 Min

14-Sundara Kandam-14.mp3    27.4 MB 29:54 Min

15-Sundara Kandam-15.mp3    27.5 MB 30:02 Min

16-Sundara Kandam-16.mp3    27.4 MB 29.56 Min 
  
17-Sundara Kandam-17.mp3    9.13 MB 9:58 Min

18-Sundara Kandam-18.mp3    27.4 MB 29:58 Min

19-Sundara Kandam-19.mp3    27.5 MB 30:02 Min

20-Sundara Kandam-20.mp3    27.6 MB 30:10 Min

21-Sundara Kandam-21.mp3    27.6 MB 30:13 Min

22-Sundara Kandam-22.mp3    22.2 MB 24:14 Min

23-Sundara Kandam-23.mp3    27.4 MB  29.58 Min

24-Sundara Kandam-24.mp3    27.4 MB  30 Min

25-Sundara Kandam-25.mp3   27.4 MB  29:56 Min

26-Sundara Kandam-26.mp3    27.05 MB 30:04 Min

27-Sundara Kandam-27.mp3    27.4 Mb  29.59 Min

28-Sundara Kandam-28.mp3    13.7 Mb 15:01 Min

சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ? படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ?எப்படி படிக்க வேண்டும்? என விளக்கும் முதல் நான்கு பகுதி

முதல் பகுதி       Track01.mp3       28.3 MB  30:56 Min

இரண்டாம் பகுதி   Track02.mp3        19.6 MB 21:28 Min  

மூன்றாம் பகுதி      Track03.mp3           28.4 MB 31:7 Min

நான்காம்  பகுதி      Track04.mp3       24.4 MB 26:40  Min

ஸ்ரீ வேலுக்குடி கிருஷ்ணன் நடத்திய உபன்யாசம் - 28

FOR LISTENING AND DOWNLOADING.

https://www.mediafire.com/folder/lnek2lc99wdh5/Sundara_Kandam-_U.Ve.Velukkudi_Krishnan

Another link to listen in Tamil by Vijaya with Latha Raju.




Collected by:   K.Raman.

Monday, February 17, 2014

இங்க்லிஷ்காரன் ரொம்ப புத்திசாலிதான் !



கல்வித்துறையில் ரொம்ப பெரிய போஸ்டில் இருந்தவர் ஒருவர் மடத்துக்கு அடிக்கடி வருவார்.

ஒருதடவை அப்படி வரும் போது தன்னுடன் இரண்டு வெள்ளைக் காரர்களை அழைத்து வந்தார். வந்தவர், வெறுமனே அவர்களுடன் வரவில்லை, கூடவே "தன்னை நாடி இங்க்லாண்டிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்ற பெருமிதம் தலைக்கேற வந்தார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு "இவா ரெண்டு பேரும் லண்டன்ல ரிஸர்ச் பண்ணிண்டிருக்கா.... almost எல்லா சப்ஜெக்ட்லேயும் புகுந்து வெளையாடியிருக்கா.... பொதுவா இங்க்லீஷ்காராளே ரொம்ப புத்திசாலிகள்! அதுலேயும் இவா ரெண்டு பேரும் ரொம்ப intelligent! பிஹெச்.டி பண்ணியிருக்கா... இங்க்லீஷ்லதான் வர்ஷாவர்ஷம் புதுசுபுதுசா வார்த்தைகள் சேர்ந்துண்டே போறதே! புது scientific வோர்ட்ஸ் நெறைய கண்டு பிடிச்சிருக்கா. அதான், அந்த பாஷை தேங்கிப் போய் பாஸி பிடிக்காம pureஆ இருந்துண்டு இருக்கு..."

இங்க்லிஷுக்கு ஒரு ஸ்தோத்ரமே பண்ணிவிட்டார் !

யார் முன்னால் பேசினாலும் டம்பம் இல்லாமல் அடக்கமாகப் பேசவேண்டும். அதுவும் ஞானக்கடலான பெரியவா மாதிரி மஹான்கள் முன்னால், தெரிந்தாலும் பேசாமல் அடக்கமாக இருப்பதுதான் சிறப்பு.

தலைகால் தெரியாமல் அதிகம் பேசுவது நம்முடைய மடமை. ஏனென்றால் யார் முன் பேசுகிறோம்! ஒரு வழியாக அவர் மூச்சு விட சற்று நிறுத்தியதும், ஞான சாகரத்திலிருந்து ஒரு துளி வெளியே வந்து விழுந்து அங்கிருந்தோரைத் திணற அடித்தது.

"ஆமாமா....இங்க்லிஷ்காரன் ரொம்...ப புத்திசாலிதான்! நாம என்ன பண்றோம்? பாலைத் தயிரா ஆக்கறோம். அது ஸ்வபாவமா நடக்கறது. ஆனா, தயிரைப் பாலா மாத்தறதில்லே; ஏன்னா.....அது முடியாத விஷயம்.

அதுனாலதான் அக்ஞானிகளான நாம, அந்த மாதிரில்லாம் முயற்சி பண்றதில்லை. ஆனா, இங்க்லிஷ்காரன் புத்திசாலியோன்னோ.... "இதோ, தயிரைப் பாலாக்கி காட்டறேன்"..னான்! Butter Milk ன்னு ஒரு வார்த்தையை கண்டுபிடிச்சுட்டான்! பாத்தியா! எவ்ளோ..வ் சுலபமா butterஐ மில்க் ஆக்கிட்டான்!

நாம என்னவோ அதை "மோர்"ன்னு சொல்றோம்; milk ன்னு சொல்றதில்லே".... புன்சிரிப்புடன் பெரியவா சொன்னதும் கல்வித்துறையின் முகத்தில் ஈயாடவில்லை. சுற்றி இருந்தவர்கள் இந்த விளக்கத்தை கேட்டு, அதிலிருந்த "இதுநாள் வரை காணத் தவறிய" உண்மையை உணர்ந்து புன்னகைத்தனர்.

அந்த வெள்ளைக்கார மாணவர்களோ, பெரியவா சொன்னதை மொழி பெயர்த்து கேட்ட பின்,

"Oh ! My God ! It is not a butter research; but a better research!....." என்று ஆச்சர்யப்பட்டு மிகவும் ரசித்தார்கள்.